கருத்துக்களும் பரிந்துரைகளும்
கருத்துக்களும் பரிந்துரைகளிற்கும் பொறுப்பாகவுள்ள நபரே நமது பாடசாலையின் மாணவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கும் பொறுப்பாகவுள்ளார். உங்களிற்கு அல்லது உங்கள் பிள்ளைகளிற்கு ஏதாவது பாடசாலை தொடர்பாக கரிசனைகள் இருந்தால் தயக்கமின்றி எம்முடன் உரையாடலாம்.
உங்கள் அனைவரிடமிருந்தும் ஆக்கபூர்வமான கருத்துக்களும் பரிந்துரைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. நீங்கள் தெரியப்படுத்தும் பாராட்டுக்கள் நிச்சயமாக அவரவர்களைச் சென்றடையும். அதேபோல் நீங்கள் தெரியப்படுத்தும் கருத்துக்களோ குறைகளோ ஒருபோதும் உங்கள் பிள்ளைகளின் கல்வியை எந்த வகையிலும் பாதிக்காது. ஏதாவது முக்கிய விடயம் பற்றி நீங்கள் நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துவர விரும்பினால் அதை அதற்கு பொறுப்பானவரிடம் உடன் தெரியப்படுத்துங்கள். அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். அத்தீர்மானம் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் உடன் கல்விக்கூட தலைமை ஆசிரியர் அல்லது ஒழுங்காற்றுக்குழுவிற்கு பொறுப்பான திரு. தயாபரனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அது உடன் பதியப்பட்டு அடுத்த பாடசாலை தினத்திற்கு முன் தீர்வு காண்பதற்கு முழு முயற்சி எடுக்கப்படும். உரிய தீர்வு காணப்படாத தருணத்தில் அதற்கான காரணம் அல்லது விளக்கம் உங்களுக்கு தரப்படும்.
நீங்கள், உங்கள் கருத்துக்களையும் கரிசனைகளையும் முன்வந்து தெரிவிப்பதற்கு இத்தகவல் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.