தமிழ் மொழியுடனும் கலை, பண்பாட்டுடனும் இணைந்திருக்க !
சௌத்தென்ட் கல்விக்கூடம்
சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடமானது, நான்கு தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப்பட்டு, 25.09.2010 அன்று வணக்கத்திற்குரிய சௌத்தென்ட் நகராட்சித் தலைவி, நகராட்சி மன்ற உறுப்பினர் திருமதி ஆன் கொல்ன்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இக்கல்விக்கூடத்தின் பிரதான இலக்கானது இங்கு பிறந்து வளர்ந்து வரும் எமது சிறார்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை கற்றுக்கொடுப்பதுடன் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்கும் உதவுதலுமாகும். இங்கு தமிழ் மொழி மற்றும் நுண்கலைப்பாடங்கள் தேசிய பாடசாலை கால அட்டவணைக்கேற்ப மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடாத்தப்படுகின்றன.
அத்துடன் சகல மாணவர்களும் விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்ற எம்மால் ஊக்குவிக்கப்படுகின்றனர். சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தின் சேவையானது முற்றிலும் தன்னார்வ தொண்டர்களாலும் தொண்டர் ஆசிரியர்களாலும் எந்தவித இன, மத, நிற, மொழி வேறுபாடின்றி நடாத்தப்படுகின்றது. புதிய தொண்டர்களின் உதவியும் ஆற்றலும் எப்பொழுதும் இக்கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்றது. தொண்டராசிரியராக இணைய விரும்புவோருக்கு மட்டும் குறிப்பிட்ட சில அடிப்படைத் தகமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- தமிழால் நம் உறவு – தமிழால் நம் உயர்வு !