நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்

நோக்கம்

கல்விக்கூடத்தின் பிரதான இலக்கானது இந் நாட்டில் பிறந்து வளர்ந்து வரும் நமது சிறார்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களை கற்றுக்கொடுத்து அவற்றை பாதுகாப்பதுடன், இந்நாட்டின் பல்கலாச்சார மக்களுடன் இணைந்து வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பது.

குறிக்கோள்கள்

  • கல்விக்கூடத்தின் பிரதான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக செளத்தென்ட்டில் ஓர் தமிழ் கல்விக்கூடம் தொடங்கப்பட்டு;
  • நான்கு முதல் பதினெட்டு வயதுடைய மாணவர்கள் மற்றும் தமிழ் கற்க ஆர்வமுள்ள
  • அனைவருக்கும் தமிழ் மொழி, கலை , பண்பாட்டு விழுமியங்களைக் கற்பித்தல்
  • ஆர்வமுள்ளவர்களுக்கு நுண்கலைகளை கற்பித்தல்
  • பாடசாலை தவிர்ந்த நேரங்களில் விளையாட்டு மற்றும் அவரவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
  • முழுநேர ஆங்கிலப் பாடசாலையின் பாடத்திட்டத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி வழங்குதல்
  • சமூக நல சேவைகள் வழங்குதல்
  • உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்கும் உதவுதல்
  • காலத்தின் தேவைக்கேற்ப கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழுவால் பரிந்துரைக்கப்படும் கல்விசார் மற்றும் சமூக நல சேவைகளை முன்னெடுத்தல்