நிர்வாக கட்டமைப்பு ஆவணம்

01. பெயர்

பாடசாலையின் பெயர் தமிழில் செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் என்றும், ஆங்கிலத்தில் செளத்தென்ட் தமிழ் ஸ்கூல் (School) என்றும் அழைக்கப்படும். இனி இவ் யாப்பில் செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் என்பதற்குப் பதிலாக கல்விக்கூடம் எனும் பதம் குறிப்பிடப்படுகிறது.

02. செளத்தென்ட் தமிழ் கல்விக்கூட உருவாக்கம்.

சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடமானது, தட்சணாமூர்த்தி கந்தவேள், பாலசிங்கம் குகனேஸ்வாரன், குமாரசாமி சிவபாலன் மற்றும் லோகேந்திரன் தயாபரன் ஆகிய நான்கு தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப்பட்டு, 25.09.2010 அன்று வணக்கத்திற்குரிய சௌத்தென்ட் நகராட்சித் தலைவி, நகராட்சித் மன்ற உறுப்பினர் திருமதி ஆன் கொல்ன்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

03. நிர்வாகம்

கல்விக்கூடமும் மற்றும் அதன் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் இவ் யாப்பு மற்றும் பின் இணைப்பில் குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில், கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழுவால் நிர்வாகிக்கப்படும். .

04. நோக்கம்

கல்விக்கூடத்தின் பிரதான இலக்கானது இந் நாட்டில் பிறந்து வளர்ந்து வரும் நமது சிறார்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு மொழி, கலை, கலாச்சார விழுமியங்களை கற்றுக்கொடுத்து அவற்றை பாதுகாப்பதுடன், இந்நாட்டின் பல்கலாச்சார மக்களுடன் இணைந்து வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பது.

05. குறிக்கோள்கள்

கல்விக்கூடத்தின் பிரதான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக செளத்தென்ட்டில் ஓர் தமிழ் கல்விக்கூடம் தொடங்கப்பட்டு

  • கல்விக்கூடத்தின் பிரதான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக செளத்தென்ட்டில் ஓர் தமிழ் கல்விக்கூடம் தொடங்கப்பட்டு
  • ஆர்வமுள்ளவர்களுக்கு நுண்கலைகளை கற்பித்தல்
  • பாடசாலை தவிர்ந்த நேரங்களில் விளையாட்டு மற்றும் அவரவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
  • முழுநேர ஆங்கிலப் பாடசாலையின் பாடத்திட்டத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி வழங்குதல்
  • சமூக நல சேவைகள் வழங்குதல்
  • காலத்தின் தேவைக்கேற்ப கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழுவால் பரிந்துரைக்கப்படும் கல்விசார் மற்றும் சமூக நல சேவைகளை முன்னெடுத்தல்
  • உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்கும் உதவுதல்
06. நிறைவேற்று அதிகாரம்

கல்விக்கூடத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் :

  • கல்விக்கூடத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்.
  • கல்விக்கூடத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்
  • கல்விக்கூடத்தின் குறிக்கோள்களை எப்படி நிறைவேற்றுவது மற்றும் கல்விக்கூடத்தின் வளர்ச்சித் திட்டங்கள் ஆண்டுதோறும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
  • கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலானது ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் போது பெறப்படவேண்டும்

07. கல்விக்கூட ஒருங்கிணைப்புக் குழு

  • கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கத்தவர்கள் விபரம் இவ் யாப்பின் “ஒருங்கிணைப்புக் குழு இணைப்பு இரண்டில் இணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவில் ஆகக் குறைந்தது ஐந்து நபர்கள் தொடக்கம் பதினொரு உறுப்பினர்கள் வரை இடம்பெறுவதுடன் இக்குழு அங்கத்துவ நியமனம் மூண்று ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படல் வேண்டும்.
  • செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியரே ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஆவார்.
  • கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழுவில், குறைந்தது இரு ஆசிரியர்கள் பிரதிநிதித்துவப்படல் வேண்டும்

08. உறுப்பினர்கள்

  • கல்விக்கூடத்தின் உறுப்பினர் உரிமைகள் கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்
    • ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழு உறுப்பினர்கள்
    • கல்விக்கூட கட்டணம் நிலுவையில் இல்லாத பதினெட்டு வயதிற்குட்பட்ட மாணவர்களின் பெற்றோர் (தாய் அல்லது தந்தை ) அல்லது பாதுகாவலர், பாடசாலையில் சேர்ந்து 12 வாரங்களின் பின் அவர் ஒரு முழு உறுப்பினராக கருத்திற்கொள்ளப்படுவார்
    • கல்விக்கூட கட்டணம் நிலுவையில் இல்லாத பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையில் சேர்ந்து 12 வாரங்களின் பின் முழு உறுப்பினர்கள் ஆவார்கள்.
    • கல்விக்கூடத்தின் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட பழைய மாணவர்கள், பழைய மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் இணை உறுப்பினர்கள் ஆவார்கள்
    • கல்விக்கூடத்தின் குறிக்கோள்களை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் இணை உறுப்பினர்கள் ஆகலாம்.
  • ஒவ்வொரு முழு உறுப்பினருக்குமான வாக்குக்குரிமை ஒன்று என கருத்திற் கொள்ளப்படும்
  • இணை உறுப்பினர்களிற்கு வாக்களிக்கும் உரிமை இல்லை
  • உறுப்பினர்களுக்கான வருடாந்த சந்தா மற்றும் கல்விக்கூடத்தில் கற்பிக்கப்படும் பாடங்களிற்கான கட்டணம் என்பவற்றை ஒருங்கிணைப்புக் குழுவே தீர்மானிக்கும். ஒருங்கிணைப்புக் குழுவிற்கு இக்கட்டணங்களை குறைப்பதற்கும் இல்லாமல் ஆக்குவதற்கும் மற்றும் கட்டணம் கட்டும் கால எல்லையை தீர்மானிப்பதற்கும் முழு அதிகாரமும் உண்டு
  • எந்தவொரு முழு உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு எதிராக சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தை அழைக்குமாறு தலைமை ஆசிரியரை அல்லது செயலாளரைக் கோரலாம். அதற்கு அவர்கள் எழுத்துமூலமாக காரணத்தை தெரிவித்து மேலும் குறைந்த பட்சம் பத்து முழு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தலைமை ஆசிரியரிடம் அல்லது செயலாளரிடம் கொடுக்க வேண்டும். இருபத்தொரு நாட்களுக்குள் சிறப்புப் பொதுக் குழு கூட்டப்படல் வேண்டடும்.

09. உறுப்பினராக இருப்பதை நிறுத்தல்

  • உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்து பதவி விலகலாம்
  • ஒரு வருடத்திற்கு தங்கள் உறுப்பினர் கட்டணம் அல்லது அவர்களின் குழந்தைகள் கட்டணத்தை செலுத்தாத உறுப்பினர்களை ஒருங்கிணைப்புக் குழு தொடர்புகொண்டு அவர்கள் தரப்பு கருத்துக் கேட்டபின் அந்த உறுப்பினரரின் உறுப்புரிமை பற்றித் தீர்மானிக்கப்படும். ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவே இறுதி முடிவு
  • நட்புணர்வற்ற இன, பால், மத, நிற, சாதி,மொழி குறிப்பிட்டு பிறர்மேல் வேறுபாடு காட்டுவோர், நமது சமத்துவக் கொள்கையை மீறுவோர், பிறரை கோபப்படுத்தும் விதமாக கருத்துக் கூறி கூட்ட ங்களைக் குழப்புபவர்கள், கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்க அல்லது உறுப்பினர் பதவியில் இருந்து விலக அறிவுறுத்தப்படுவர் . இவ்வாறாக நடந்து கொண்டவர்கள் தாம் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிப்பதற்கு வேறு ஓர் பொது நபர் ஒருவருடன் சேர்ந்து ஒருங்கிணைப்புக் குழுவின் முன்தோன்றி தமது கருத்தைக் கூற உரிமையுண்டு. ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவே இறுதி முடிவு.

10. ஒருங்கிணைப்புக் குழு தேர்வு

  • வருடாந்த பொதுக்கூட்டம் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் நடைபெறும். இப் பொதுகூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர், பொருளாளர் உட்பட கல்விக்கூட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கத்தவர்களை முழு உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள்.
  • ஒருங்கிணைப்புக் குழுவிற்கான தேர்தலை தலைமை ஆசிரியர் அல்லது செயலாளர் தலைமை ஏற்று நடாத்துவார். ஒருங்கிணைப்புக் குழு அங்கத்தவர் தெரிவிற்கான போட்டியில் பங்குபற்ற விரும்பும் நபர் அதற்கான விண்ணப்பப்படிவத்தை செயலாளரிடம் கையளிக்கவேண்டும். விண்ணப்பதாரரின் விபரம் செயலாளரால் பாடசாலை அறிவிப்புப் பலகையில் அல்லது புலனக்குழுவின் மூலமாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.
  • கல்விக்கூட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்புக் குழு அங்கத்தவர்கள், வேறுநபர்கள் போட்டியிடாத பட்சத்தில் மாத்திரம் மீள் வாக்கெடுப்பிற்குச் செல்லாமல் மூன்று வருடத்திற்கு மேல் அவரவர் சேவையில் தொடர்வர்.
  • ஒருங்கிணைப்புக் குழு அங்கத்தவர்ளை முன்மொழிபவர்களும் வழிமொழிபவர்களும் முழு உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
  • கணவன் மனைவி இருவரும் ஒரேசமயத்தில் இருவேறு பதவிகளை ஒருங்கிணைப்புக் குழுவில் வகிக்க முடியாது.
  • ஒருங்கிணைப்புக் குழு அங்கத்தவர்களாக நலன் முரண்பாடு (conflict of interest) உள்ளவர்கள் கடமை ஆற்ற முடியாது (இணைப்பு ஒன்று, சரம் 1.8 ஐப் பார்க்க) .

11. தலைமை ஆசிரியர் பொறுப்பு / பதவி நிறுத்தம்

தலைமை ஆசிரியர் கீழ்வரும் காரணங்களிற்காக பொறுப்பு துறக்கலாம் அல்லது நீக்கப்படலாம்

  • தலைமை ஆசிரியரை நன்னடத்தை சான்றிதழின் (DBS check )அடிப்படையில் நீக்கப்படலாம்.
  • கல்விக்கூட நன்னடத்தை விதிகளை (STS Code of Conduct) கடைப்பிடிக்காததன் அடிப்படையில் நீக்கப்படலாம். ( நன்னடத்தை விதிகளை பார்க்கவும்).
  • உடல் உளரீதியாக தன் வேலைகளை தானே செய்யமுடியாதவராக இருந்தல்
  • பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு தொடர்ந்து சமுகம் தரமுடியாமல் இருந்தல்
  • தானாக முன்வந்து எழுத்து மூலமாக செயலாளருக்கு பதவி விலகுவதாக அறிவித்தல்
  • மூன்றில் இரண்டு முழு உறுப்பினர்கள் பங்குபற்றும் வருடாந்த அல்லது விசேட பொதுக்கூட்டத்தில் தலைமை ஆசிரியரை பதவி விலக வாக்களிக்கும் பட்சத்தில்

12. பொதுக்கூட்ட விதி

பொதுக்கூட்ட விதிமுறைகளிற்கு, கல்விக்கூட பொதுக்கூட்ட விதி ஆவணத்தைப் (STS Meeting Procedure Document) பார்க்கவும்

13. தலைமை ஆசிரியர் தேர்வு

  • ஒருங்கிணைப்புக் குழு தலைமை ஆசிரியரை தெரிவுசெய்வது
    • முதற்கட்டமாக ஆசிரியர்களிடம் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.
    • இறுதி முடிவு, மூன்றில் இரண்டு முழு உறுப்பினர்கள் பங்குபற்றும் வருடாந்த அல்லது விசேட பொதுக்கூட்டத்தில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்

14. தலைமை ஆசிரியரின் கடமையும் பொறுப்பும்

  • தலைமை ஆசிரியரே கல்விக்கூடத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் முதன்மையானவர். .
  • தொண்டர் ஆசிரியர்களை நியமிப்பதற்கு தலைமை ஆசிரியர் நிர்வாகக் குழுவின் ஒப்புதலை பெறத்தேவையில்லை
  • தலைமை ஆசிரியர் ஊடாகவே ஒருங்கிணைப்புக் குழு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்ளுக்கு வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்
  • தலைமை ஆசிரியரே கல்விசார் நடவடிக்கைகள், மற்றும் பெற்றோர், ஆசிரியர் குறை நிறைகள் ஆகியவற்றை முதலில் கையாளுவார். தேவை ஏற்படின் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் இவ் விடயத்தை கலந்துரையாடலாம்.

15. ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பு / பதவி நிறுத்தம்

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் கீழ்வரும் காரணங்களிற்காக பொறுப்பு துறக்கலாம் அல்லது நீக்கப்படலாம் :

  • நன்னடத்தை சான்றிதழின் (DBS check )அடிப்படையில் நீக்கப்படலாம்
  • கல்விக்கூட நன்னடத்தை விதிகளை (STS Code of Conduct) கடைப்பிடிக்காததன் அடிப்படையில் நீக்கப்படலாம். ( நன்னடத்தை விதிகளை பார்க்கவும்).
  • உடல் உளரீதியாக தன் வேலைகளை தானே செய்யமுடியாதவராக இருந்தல்
  • தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெறாமல் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு சமுகமளிக்காதிருத்தல்
  • தானாக முன்வந்து எழுத்து மூலமாக செயலாளருக்கு பதவி விலகுவதாக அறிவித்தல்

16. கருத்துக்களும் பரிந்துரைகளும்

கருத்துக்களும் பரிந்துரைகளும் எனும் ஓர் சுதந்திரமாக செயற்படும் நிர்வாக ஊழியரை பாடசாலை கொண்டிருக்கும். அவ்வூழியர்கள் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்விசார் குறைகள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர். தேவை ஏற்படின் உரிய தீர்வுகாணும் முயற்சியில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களும் பங்கெடுப்பார்கள்.

17. பணியாளர் நியமனம்

  • உயர் நன்னடத்தை சான்றிதழ் (enhanced DBS check ) பெற்றவராக இருத்தல் வேண்டும்
  • நலன் முரண்பாடு (conflict of interest) அற்றவராக இருத்தல் வேண்டும். (இணைப்பு ஒன்றில் சரம் 1.8 ஐப் பார்க்க)
  • பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு தொடர்ந்து சமுகம் தரக்கூடியவராக இருத்தல் வேண்டும் அல்லது தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெறப்படல் வேண்டும்.
  • கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்கள் ஒப்பந்தப்பத்திரத்தைப் பார்க்கவும்

18. நிதி நிர்வாகம்

  • கல்விக்கூடத்தின் பொருளாளர் அனைத்து நிதி நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருப்பார். கல்விக்கூடத்தின் கட்டணங்கள், நன்கொடைகள், பங்களிப்புகள் மற்றும் பிற வருமானங்கள் அனைத்தும் கடன்கள், ஊழியர் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்ட பின்னர் கல்விக்கூட வங்கிக்கணக்கில் வைப்பில் இடப்பட வேண்டும்
  • கல்விக்கூடத்தின் நிதி இவ் யாப்பின் அடிப்படையில் மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும்
  • கல்விக்கூடத்தின் அனைத்து செலவுகளுக்கும் பொருளாளரிடம் முன் அனுமதி பெறப்படவேண்டும் .
  • அனைத்து கொடுப்பனவுகளுகக்குமான அனுமதிச்சீட்டில் இருவர் கையொப்பமிடல் வேண்டும், அதில் ஒருவர் பொருளாளராக இருத்தல் வேண்டும்
  • கல்விக்கூடத்தின் சார்பாக பொருளாளரே பாடசாலையின் வரவு செலவு கணக்குகளை வைத்திருப்பார். மற்றும் ஒவ்வொரு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் பொருளாளரால் வங்கியின் இருப்புத்தொகை உட்பட அக்காலத்துக்குரிய வரவு செலவுக் கணக்கு சமர்பிக்கப்படல் வேண்டும்
  • ஆவணி முதற் திகதி முதல் ஆடி முப்பத்தோராம் திகதிவரை கல்விக்கூடத்தின் நிதியாண்டாகக் கொள்ளப்படும். ஒவ்வொரு நிதியாண்டிற்குமான வரவுசெலவுக் கணக்கு கல்விக்கூட வருடாந்த பொதுக்கூட்டத்தில் சமர்பிக்கப்படல் வேண்டும்.

19. தகவல் பாதுகாப்பு

கல்விக்கூடமானது இந் நாட்டின் தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைவாக அனைத்து தகவல்களையும் பாதுகாக்கும். மேலதிக விபரங்களிற்கு கல்விக்கூட தகவல் பாதுகாப்பு கொள்கை ஆவணத்தைப் (STS Data Protection Policy Document) பார்க்கவும்

20. சமத்துவக் கொள்கை

  • கல்விக்கூடமானது அதன் சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிக்கும், மேலதிக விபரங்களிற்கு கல்விக்கூட சமத்துவக் கொள்கை ஆவணத்தைப் (STS Equal Opportunity Policy) பார்க்கவும்
  • கல்விக்கூடத்தின் சேவையானது இவ் யாப்பின் 4ம் சரத்தின் படி அனைவருக்கும் எவ்வித வேறுபாடுகள் இன்றி வழங்கப்படும்.

21. சிறுவர் பாதுகாப்பு

கல்விக்கூடமானது அதன் சிறுவர் பாதுகாப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கும், மேலதிக விபரங்களிற்கு கல்விக்கூட சிறுவர் பாதுகாப்புக் கொள்கை (STS Safeguarding and Child Protection Policy) இணைப்பை பார்க்கவும்.

22. யாப்புத் திருத்தங்கள்

  • வருடாந்த அல்லது சிறப்பு பொதுக்கூட்டத்தில் மட்டும் யாப்பு திருத்தங்கள் செய்யலாம்
  • யாப்பு திருத்தத்திற்கான முன்மொழிவு செயலாளரிடம் எழுத்துமூலமாக கொடுக்கப்படல் வேண்டும். செயலாளர் கூட்ட அழைப்புடன் யாப்பு திருத்தத்திற்கான முன்மொழிவையும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்.
  • யாப்பு திருத்தத்திற்கான கூட்டத்திற்கு மூன்றில் இரண்டு முழு உறுப்பினர்கள் பங்குபற்றுதல் வேண்டும் அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

23. செயல் நிறுத்தல் / கலைத்தல்

  • கல்விக்கூட கூட்டத்தில், சிறு பெரும்பான்மையால், கல்விக்கூடத்தை மூடுவது அவசியம் என்று தீர்மானிக்கப்பட்டால், அவ்வாறு செய்ய ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்தை அழைக்க வேண்டும். அவ் சிறப்பு பொதுக் கூட்டத்தின் முழு நோக்கம் கல்விக்கூடத்தை மூடுவதுபற்றியதாகவே இருக்க வேண்டும்.
  • சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு மூன்றில் இரண்டு முழு உறுப்பினர்கள் பங்குபற்றுதல் வேண்டும் மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கல்விக்கூடத்தை மூடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். சிறப்பு பொதுக் கூட்டத்தில் கல்விக்கூடத்தை மூடுவது என்று தீர்மானிக்கப்பட்டால், அச்சிறப்பு பொதுக் கூட்டத்திலேயே கல்விக்கூட த்தின் அனைத்துக் கடன்களும் அடைக்கப்பட்டபின், மீதமுள்ள நிதி மற்றும் அசையும் ஆசையா சொத்துக்கள் அனைத்தும், நம்மைப்போல் குறிக்கோள் உடைய வேறு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானம் இயற்றப்படல் வேண்டும்.

இணைப்பு 1 - கல்விக்கூட ஒருங்கிணைப்புக் குழு

கல்விக்கூடத்தின் செயற்பாடுகள் பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வருடத்தில் குறைந்தது மூன்று முறை கூட வேண்டும்.

  • ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பொறுப்பு :
      • தலைமை ஆசிரியர் பாடசாலையின் தினசரி நடவடிக்கைகளை கவனிப்பதுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களிற்குத் தலைமை தாங்குவார்
      • செயலாளர் கூட்ட அறிக்கை எடுப்பதற்கும் மற்றும் அனைத்து ஆவணங்கள் விநியோகிப்பதற்கும் பொறுப்பாக இருப்பார்
      • பொருளாளர் கல்விக்கூடத்தின் நிதி நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருப்பார்.
      • கருத்துக்கள், பரிந்துரைகளுக்கு பொறுப்பாக இருப்பவர் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்விசார் குறைகள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
      • ஏனையவர்கள் - காலத்தின் தேவைக்கேற்ப கல்விக்கூடத்தின் ஒருங்கிணைப்புக் குழுவால் அவரவர் பணி அறிவுறுத்தப்படும். அவர்களின் பெயர் மற்றும் பொறுப்புக்கள் இணைப்பு இரண்டில் குறிப்பிடப்படல் வேண்டும்
    • பதவி விலகும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் தெரிவு அதற்கு அடுத்ததாக நடைபெறும் வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவார்கள்
    • தலைமை ஆசிரியரின் அனுமதியின்றி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு கூட்டத்திற்கு அல்லது கல்விக்கூடத்திற்கு சமுகமளிக்காத உறுப்பினர்களை ஒருங்கிணைப்புக் குழு தொடர்புகொண்டு அவர்கள் தரப்பு கருத்துக் கேட்டபின் அந்த நபரின் குழு உறுப்புரிமை பற்றித் தீர்மானிக்கப்படும். ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவே இறுதி முடிவு.
    • ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் பார்வையாளர்களாக சமுகமளிக்கலாம் ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது
    • ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற குறைந்தது ஐந்து வாக்குரிமை உள்ள உறுப்பினர்கள் வேண்டும்.
    • ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தகைமைகள்
      • தலைமை ஆசிரியர்
        • இந்நாட்டில் கற்பித்தல் அனுபவம் குறைந்தது இரண்டுவருடங்கள் இருத்தல் வேண்டும்
        • கல்விக்கூட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக குறைந்தது இரண்டுவருடங்கள் இருத்தல் வேண்டும்
        • உயர் நன்னடத்தை சான்றிதழ் (enhanced DBS check ) பெற்றவராக இருத்தல் வேண்டும்
        • நலன் முரண்பாடு (conflict of interest) அற்றவராக இருத்தல் வேண்டும். (இவ்விணைப்பின் சரம் 1.7 ஐப் பார்க்க)
      • பிற ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்
        • உயர் நன்னடத்தை சான்றிதழ் (enhanced DBS check ) பெற்றவராக இருத்தல் வேண்டும்.
        • நலன் முரண்பாடு (conflict of interest) அற்றவராக இருத்தல் வேண்டும். (இவ்விணைப்பின் சரம் 1.8 ஐப் பார்க்க)
        • கல்விக்கூட இணை அல்லது முழு உறுப்பினர் ஆக இருத்தல் வேண்டும்
        • பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு தொடர்ந்து சமுகம் தரக்கூடியவராக இருத்தல் வேண்டும் அல்லது தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெறப்படல் வேண்டும்
      • நலன் முரண்பாடு (conflict of interest)
        • நம்மைப்போல் குறிக்கோள் உடைய அமைப்பில் அங்கத்தவர்
        • நம்மைப்போல் குறிக்கோள் உடைய அமைப்பில் நிர்வாக உறுப்பினர்.
        • நம்மைப்போல் குறிக்கோள் உடைய அமைப்பில் அவர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் பயனாளிகள்
        • அடிப்படைத் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றாத தமிழர்கள்.

இணைப்பு 2 - ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

  • தலைமை ஆசிரியர் / தலைவர் : திரு லோகேந்திரன் தயாபரன் 07535692693
  • உபதலைவர் : திருமதி விஜிதகுமாரி குகன்
  • செயலாளர் : திருமதி தர்சினி ஜோ ஆனந்
  • பொருளாளர் : திரு தர்மலிங்கம் ராதாகிருஷ்ணன்
  • கருத்துக்களும் பரிந்துரைகளும்
  • நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர்
  • நிகழ்ச்சி நெறியாளர்
  • ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் : திரு ஜீவரட்ணம் குரூஸ்
  • ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் : திரு மேவின் ஸ்ரான்லி தவராசா
  • ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் : திரு யூட் மனோராஜ்